ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்: வயநாட்டில் 190 பன்றிகள் அழிப்பு

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்: வயநாட்டில் 190 பன்றிகள் அழிப்பு

கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியதையடுத்து, இரண்டு பன்றி பண்ணைகளில் இதுவரை 190 பன்றிகள் அழிக்கப்பட்டுள்ளன. 
Published on

கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியதையடுத்து, இரண்டு பன்றி பண்ணைகளில் இதுவரை 190 பன்றிகள் அழிக்கப்பட்டுள்ளன. 

பன்றிகள் அழிக்கப்படுவது தொடரும், நிலைமை கட்டுக்குள் இருப்பதால் கவலைப்படத் தேவையில்லை என்றும் மாவட்ட நிர்வாகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. 

போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனத்திலிருந்து பரிசோதனை அறிக்கைகள் அனுப்பப்பட்டன.மாதிரிகள் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சலுக்கு சாதகமாக இருந்ததைத் தொடர்ந்து பன்றிகள் அழிப்பு தொடங்கியது. 

வயநாடு, மானந்தவாடி பகுதியில் உள்ள இரண்டு பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு இந்நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அனைத்து பன்றிகளும் அழிக்கப்பட்டன. 

விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு விரைவில் வழங்கப்படும் என மானந்தவாடி துணை ஆணையர் ஸ்ரீலட்சுமி தெரிவித்தார். 

மற்ற பகுதிகள் உள்ள பண்ணைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க தேசிய நெறிமுறையின்படி பன்றிகளை அழித்தல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com