மும்பையில் 62 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு 

மும்பையில் இந்தாண்டு இதுவரை மொத்தம் 62 பேருக்கு பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரி ஒருவர் திங்கள் கிழமை தெரிவித்தார். 
மும்பையில் 62 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு 

மும்பையில் இந்தாண்டு இதுவரை மொத்தம் 62 பேருக்கு பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரி ஒருவர் திங்கள் கிழமை தெரிவித்தார். 

ஜனவரி 1 முதல் ஜூலை 24 வரை மொத்தம் 1,66,132 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 62 பேருக்கு எச்1என்1 இன்ப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மும்பை சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் டாக்டர் கௌரி ரத்தோட் தெரிவித்தார். 

மேலும் அவர் கூறுகையில், கடந்த வாரம் தாணே மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்தாண்டு மும்பை வட்டத்தில் எச்1என்1 வைரஸால் ஏற்பட்ட முதல் இறப்பு இது என்று அவர் கூறினார். 

சுகாதாரத் துறையினர் நிலைமையைக் கண்காணித்து நோய் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். 

மக்களுக்கும், மருத்துவப் பயிற்சியாளர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. தாணேயில் கோப்ரி பகுதியைச் சேர்ந்த ஜோதி ராஜா(51) ஜூலை 12 அன்று நோய்வாய்ப்பட்ட அவர் காய்ச்சல், வாந்தி மற்றும் இருமல் காரணமாக ஜூலை 18ல் உயிரிழந்தார். 

கோப்ரியைச் சேர்ந்த பபிதா ஹேட்(72) ஜூலை 9 அன்று உடல்நிலை பாதிக்கப்பட்டு ஜூலை 19இல் உயிரிழந்தார். 

இருவரும் எச்1என்1 வைரஸால் பாதிக்கப்பட்டு தாணேயில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர் என்று அந்த அதிகாரி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com