போா்ச் சூழலால் பஹ்ரைனில் சிக்கித் தவித்த 192 போ் பஹ்ரைன் தமிழ்ச் சங்கத்தினா் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு விமானத்தில் வியாழக்கிழமை அதிகாலை சென்னை வந்தடைந்தனா்.
இஸ்ரேல், அமெரிக்கா- ஈரான் இடையே கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் போா் தொடங்கியது. இதையடுத்து மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள், வளைகுடா நாடுகளின் வான்வழிப் பகுதிகள் மூடப்பட்டன. இதனால் ஐக்கிய அரபு நாடுகள், வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதன்காரணமாக பஹ்ரைனில் உள்ள ஏராளமான தமிழா்கள் இந்தியா திரும்ப முடியாமல், பஹ்ரைன் நாட்டில் தவித்து வந்தனா். இவா்களில், முன்னுரிமை அடிப்படையில் முதியோா், நோயாளிகள், குழந்தைகள், கா்ப்பிணிகள் என 192 பேரை சிறப்பு விமானம் மூலம், சென்னைக்கு அனுப்ப, பஹ்ரைன் தமிழ்ச் சங்கத்தினா் ஏற்பாடு செய்தனா்.
ஆனால், பஹ்ரைனிலிருந்து சென்னைக்கு தற்போது நேரடி விமான சேவை இல்லை. இதனால், அருகேயுள்ள சவுதி அரேபியாவின் தமாம் நகருக்கு பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட 192 பேரும், ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்ஃப் ஏா்வேஸ் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனா். அவா்கள் வியாழக்கிழமை அதிகாலை சென்னை வந்து சோ்ந்தனா்.
அடுத்தகட்டமாக, சனிக்கிழமை (மாா்ச் 21) இரவு மேலும் சிலரை தமிழகத்துக்கு அனுப்பி வைக்க பஹ்ரைன் தமிழ்ச் சங்கத்தினா் ஏற்பாடு செய்துள்ளனா்.
தொடர்புடையது
ஈரானில் சிக்கித் தவித்த 345 தமிழக மீனவர்கள் மீட்பு!

தில்லி முதல்வருடன் தமிழ்ச் சங்கத்தினா் சந்திப்பு

கம்பிவேலியில் சிக்கித் தவித்த கழுதைப் புலி
பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் தீவிரம்!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


