ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

சென்னையிலிருந்து துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் செல்லும் விமானங்கள் ரத்து!

சென்னை விமான நிலையத்திலிருந்து துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் செல்லும் விமானங்கள் ரத்து!

News image

சென்னையிலிருந்து துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் புறப்படும் விமானங்கள் ரத்து! - AP

Updated On :28 பிப்ரவரி 2026, 10:00 pm IST

சென்னை விமான நிலையத்திலிருந்து துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் செல்லும் விமானங்கள் இன்று(பிப். 28) ரத்து செய்யப்பட்டன. அமெரிக்கா, இஸ்ரேல்- ஈரான் இடையேயான ராணுவ தாக்குதல்கள் தொடங்கியதையடுத்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது.

Story image

PTI

குறிப்பாக, அமெரிக்க படைத் தளங்களைக் குறிவைத்து அரேபிய வளைகுடாவில் அபு தாபி, துபை, தோஹா, ரியாத் ஆகிய நகரங்களில் வான் வழி தாக்குதல்களை ஈரான் நடத்தியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஏர் இந்தியா, இண்டிகோ உள்பட முக்கிய விமான சேவைகள் அனைத்தும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இயக்கப்படவில்லை.

சனிக்கிழமையும் (பிப். 28) ஞயிற்றுக்கிழமையும் (மார்ச். 1) எதிஹாட் மற்றும் அமிரேட்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணிகளுக்கு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான சேவை குறித்த அண்மைத் தகவல்களை அந்தந்த விமான நிறுவனங்களின் இணைய வலைதளங்களிலும் சமூக ஊடகப் பக்கங்களிலும் பார்த்து பயணிகள் தெரிந்துகொண்டு அதற்கேற்ப தங்கள் பயணத் திட்டத்தை மாற்றிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Summary

Chennai: Flights to Dubai, Doha, Abu Dhabi and Bahrain cancelled at Chennai International Airport

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.