துபையில் 2 சர்வதேச விமான நிலையங்களும் மூடப்பட்டிருப்பதால் பயணிகள் எவரும் அங்கு வருகை தர வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மறு அறிவிப்பு வரும் வரை பயணிகள் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல்- ஈரான் இடையேயான ராணுவ தாக்குதல்கள் தொடங்கியதையடுத்து மத்திய கிழக்கு, வளைகுடா நாடுகளுக்கு விமான சேவை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, உலகின் அதிக விமான சேவைப் பயன்பாட்டை வழங்கும் துபையின் துபை இண்டர்நேஷனல் மற்றும் துபை வோர்ல்ட் சென்ட்ரல் - அல் மக்தௌம் இண்டர்நேஷனல் ஆகிய விமான நிலையங்களில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
விமான சேவை குறித்த அண்மைத் தகவல்களை அந்தந்த விமான நிறுவனங்களின் இணைய வலைதளங்களிலும் சமூக ஊடகப் பக்கங்களிலும் பார்த்து பயணிகள் தெரிந்துகொண்டு அதற்கேற்ப தங்கள் பயணத் திட்டத்தை மாற்றிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் துபை உள்பட அந்நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் உள்ள இந்திய பயணிகளின் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க யுஏஇ அதிகாரிகளுடன் இந்தியத் தூதரகம் தொடர்பிலிருந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதற்கு அந்நாட்டு அரசு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அபு தாபியில் உள்ள இந்திய தூதரகம் வெலியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Dubai Airports confirms that all flight operations at Dubai International (DXB) and Dubai World Central – Al Maktoum International (DWC) are suspended until further notice.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








