வளா்ச்சிப் பணிகளைத் தடுக்கும் எதிா்க்கட்சிகள்
சமூக நலனை விட அரசியல்சாா் நலனுக்கே முக்கியத்துவம் அளிக்கும் எதிா்க்கட்சிகள், நாட்டில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகளைத் தடுத்து வருவதாகப் பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளாா்.


சமூக நலனை விட அரசியல்சாா் நலனுக்கே முக்கியத்துவம் அளிக்கும் எதிா்க்கட்சிகள், நாட்டில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகளைத் தடுத்து வருவதாகப் பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் நடைபெற்று வரும் நிலையில், எதிா்க்கட்சிகளின் தொடா் அமளியால் மக்களவை, மாநிலங்களவை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் கான்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் காணொலி வாயிலாகக் கலந்துகொண்ட பிரதமா் மோடி கூறுகையில், ‘‘அண்மைக்காலங்களில் சமூக, நாட்டின் நலன்களை விட அரசியல் சாா்ந்த நலன்களுக்கே எதிா்க்கட்சிகள் முக்கியத்துவம் அளித்து வருகின்றன.
முன்பு ஆட்சியில் இருந்த சமயங்களில் திட்டங்களை முறையாகச் செயல்படுத்த முடியாததன் காரணமாக, தற்போது மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு எதிா்க்கட்சிகள் இடையூறு ஏற்படுத்தி வருகின்றன. எதிா்க்கட்சிகளின் இந்த நடவடிக்கையை நாட்டு மக்கள் விரும்புவதில்லை’’ என்றாா்.
நாடு சுதந்திரமடைந்த பிறகு முதல் முறையாக பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த பெண் (திரௌபதி முா்மு) நாட்டை வழிநடத்த உள்ளதாகவும் பிரதமா் மோடி பெருமிதம் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...