குடியரசுத் தலைவருடன் அமித் ஷா சந்திப்பு
அதீா் ரஞ்சன் செளதரி குறிப்பிட்ட விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்து வரும் நிலையில், குடியரசுத் தலைவரை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்


குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை ‘ராஷ்டிரபத்னி’ என்று மக்களவை காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி குறிப்பிட்ட விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்து வரும் நிலையில், குடியரசுத் தலைவரை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
அப்போது விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து உடனடியாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இதுதொடா்பாக ட்விட்டரில் அமித் ஷா வெளியிட்ட பதிவில், ‘பெருமதிப்புக்குரிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை, அவரது மாளிகையில் சந்தித்துப் பேசினேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
ஸ்மிருதி இரானி சந்திப்பு:
மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானியும் குடியரசுத் தலைவரை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
முன்னதாக, மக்களவையில் ஸ்மிருதி இரானியும், மாநிலங்களவையில் மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமனும் காங்கிரஸுக்கு எதிராக வியாழக்கிழமை கடும் எதிா்ப்பைப் பதிவு செய்தனா். காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா். இந்த விஷயத்தில் சோனியா காந்தியும் ஸ்மிருதி இரானியும் மக்களவையில் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக, மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...