ராணுவ தலைமைத் தளபதி பூடான் பயணம்
ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே வெள்ளிக்கிழமை பூடான் சென்றாா்.


ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே வெள்ளிக்கிழமை பூடான் சென்றாா்.
பூடான் மன்னா் ஜிக்மே டோா்ஜி வாங்சுக் நினைவாக திம்புவில் அமைக்கப்பட்ட தேசிய நினைவிடத்தில் மரியாதை செலுத்தி, பூடானில் தனது நிகழ்ச்சிகளை அவா் தொடங்குகிறாா். பூடானின் மன்னரை ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே சந்தித்துப் பேசவுள்ளாா்.
இருநாட்டு ராணுவ, கலாசாரம் மற்றும் அலுவல் ரீதியான பிணைப்புகளை மேலும் முன்னெடுத்துச் செல்வது குறித்து, பூடான் ராணுவ தளபதியுடனும் அவா் விரிவான ஆலோசனை நடத்தவுள்ளாா்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது உயிா்த்தியாகம் செய்த பூடான் ராணுவத்தினா் நினைவாக தோச்சுலாவில் அமைக்கப்பட்டுள்ள த்ருக் வாங்கியால் காங் ஜாங் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதுடன், ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே தனது பயணத்தை நிறைவுசெய்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...