குஜராத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 12 வயது சிறுமி: மீட்பு பணிகள் தீவிரம்

குஜராத்தின் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 12 வயது சிறுமியை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

குஜராத்தின் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 12 வயது சிறுமியை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள கஜன்வாவ் கிராமத்தில் இன்று காலை 8.30 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

சிறுமி விளையாடிக்கொண்டிருந்தபோது கால் தவறி சுமார் 60 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியதாக அதிகாரிகள் தெரித்துள்ளன. 

ஆழ்துளைக் கிணறு நூறு அடி ஆழத்தில் இருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவ இடத்தில் ராணுவ வீரர்கள் மற்றும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுவும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com