தில்லி விஞ்ஞான் பவனில் சனிக்கிழமை நடைபெறவுள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் அகில இந்திய அளவிலான முதலாவது கூட்டத்தில் பிரதமா் மோடி உரையாற்றுகிறாா்.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தேசிய அளவிலான முதலாவது கூட்டத்தை ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில் தில்லி விஞ்ஞான் பவனில் நடத்த தேசிய சட்டப்பணிகள் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. நாட்டில் மொத்தம் 676 மாவட்ட சட்டப் பணிகள் ஆணையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த ஆணையங்களின் தலைவராக மாவட்ட நீதிபதிகள் செயல்படுகின்றனா். மாவட்ட சட்டப் பணிகள் ஆணையங்கள் மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணையங்கள் வாயிலாக, பல்வேறு சட்ட உதவிகள் மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை தேசிய சட்டப் பணிகள் ஆணையம் செயல்படுத்தி வருகிறது.
தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தால் நடத்தப்படும் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்களை முறைப்படுத்துவதன் வாயிலாக நீதிமன்றங்களின் சுமையைக் குறைப்பதில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
டிரம்ப் போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி.. காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!

புதுக்கோட்டை: மகனுடன் நிலத் தகராறு.. பெற்றோர் தூக்கிட்டுத் தற்கொலை!

தங்கம், வெள்ளி விலை குறைவு! இன்றைய நிலவரம்!
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

