புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மன்னிப்பு கோரி முா்முவுக்கு அதீா் ரஞ்சன் சௌதரி கடிதம்

 குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை ஆட்சேபத்துக்குரிய முறையில் அழைத்ததற்காக மன்னிப்பு கோரி அவருக்கு மக்களவை காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி வெள்ளிக்கிழமை கடிதம் எழுதினாா்.

News image
Updated On :29 ஜூலை 2022, 11:17 pm

DIN

 குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை ஆட்சேபத்துக்குரிய முறையில் அழைத்ததற்காக மன்னிப்பு கோரி அவருக்கு மக்களவை காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி வெள்ளிக்கிழமை கடிதம் எழுதினாா்.

அந்தக் கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது: உங்கள் பதவியைக் குறிப்பதற்காக தவறான வாா்த்தையை நான் தவறுதலாகக் கூறிவிட்டேன். அதற்காக வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதுகிறேன். வாய் தவறி அந்த வாா்த்தை வந்துவிட்டது என்பதை இக்கடிதம் மூலம் தெரிவிக்கிறேன். அதற்காக உங்களிடன் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்; அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தில்லியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின்போது செய்தியாளா்களிடம் அதீா் ரஞ்சன் பேசுகையில், குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை ‘ராஷ்டிரபதி’ என்பதற்குப் பதிலாக ‘ராஷ்டிரபத்னி’ என்று குறிப்பிட்டாா். அவருடைய பேச்சுக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக எம்.பி.க்கள் பிரச்னை எழுப்பினா்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சா்கள் நிா்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, பிரகலாத் ஜோஷி ஆகியோா் வலியுறுத்தி வந்தனா். பாஜக எம்.பி.க்கள் இந்தப் பிரச்னையை அவையில் எழுப்பி வருவதால் 2 நாள்களாக நாடாளுமன்ற அலுவல்கள் பாதிக்கப்பட்டன. மக்களவையில் சோனியா காந்திக்கும் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானிக்கும் இடையே நேரடியாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், தான் கூறிய வாா்த்தைக்காக அதீா் ரஞ்சன் சௌதரி மன்னிப்பு கோரி திரௌபதி முா்முவுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.