உத்தரப்பிரதேசத்தில் ஒரு பள்ளியில் மாணவர் ஒருவர் ஆசிரியை கை அமுக்கி மசாஜ் செய்யும் அதிர்ச்சி விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தற்போது அந்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், ஹர்தோய் பகுதியில் இயங்கி வரும் போகாரி அரசு தொடக்கப் பள்ளியில் உதவி ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ஊர்மிளா சிங். இவர் பணியின் போது வகுப்பில் இருந்த மாணவர் ஒருவரை கையை அமுக்கி மசாஜ் செய்துவிடச் சொல்லியுள்ளார்.
நாற்காலியில் அமர்ந்தபடியே இருக்கும் ஆசிரியையின் கையை மாணவர் அமுக்கி மசாஜ் செய்துவிடுகிறார். ஆசிரியை நிதானமாக கையில் தண்ணீர் பாட்டிலுடன் மாணவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்குவதையும் அந்த விடியோவில் காண முடிகிறது. இதனை அங்கிருக்கும் யாரோ ஒருவர் விடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடியோ சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்ட சிறிது நேரத்திலே வைரலானது.
இதையும் படிக்க | நாட்டில் ஒரு தேசியமொழி சாத்தியமில்லை: முதல்வர் ஸ்டாலின்
இதற்கு அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருவதைத் தொடர்ந்து தற்போது அந்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மாம்பழம் சின்னம் விவகாரம்: ராமதாஸுக்கு தொடர் பின்னடைவு!

துரந்தர் 2! திரிதேவ் படத்தின் பாடல் அனுமதியின்றி பயன்படுத்தியதாக வழக்கு!

🔴புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! பிற்பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


