சிறுபான்மை மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவது நாட்டை பிளவுபடுத்தும்: ரகுராம் ராஜன் எச்சரிக்கை

சிறுபான்மையின மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் எந்தவொரு முயற்சியும் இந்தியாவை பிளவுப்படுத்தும் என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்
முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்
Published on
Updated on
1 min read

சிறுபான்மையின மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் எந்தவொரு முயற்சியும் இந்தியாவை பிளவுப்படுத்தும் மற்றும் உள் பிளவை உருவாக்குவதுடன் மக்களிடையே கசப்பை ஏற்படுத்தும் என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற அகில இந்திய தொழில் வல்லுநர்கள் காங்கிரஸின் (ஏஐபிசி) 5 ஆவது தேசிய மாநாட்டில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கலந்துக்கொண்டு பேசினார்.

அப்போது, “இந்தியாவின் வளர்ச்சியை ஜனநாயகம் தடுப்பதாக சிலர் பேசுகின்றனர். சிலர் நாட்டின் வளர்ச்சிக்கு  இன்னும் கூடுதல் கட்டுப்பாடு மற்றும் சர்வாதிகார தலைமை தேவை என நினைக்கின்றனர்.

இதுமுற்றிலும் தவறானது. இது நாட்டின் வளர்ச்சிக்கு ஒருபோதும் உதாவது. அதுமட்டுமல்லாது, பொருள்கள் மற்றும் மூலதனத்தை வலியுறுத்தும் ஒரு தோல்வியடைந்த வளர்ச்சி (காலாவதியான) மாடலையே இவை அடிப்படைப்படையாக கொண்டுள்ளது. மேலும் இது புதிய சிந்தனைக்கான மாடல் அல்ல என்று ரகுராம் ராஜன் கூறினார்.

அதேபோல் நமது நாட்டில் உள்ள பொருளாதார வளர்ச்சியை பார்த்தோம் என்றால், செயல்திறன் மிகவும் குறைவாக இருக்கிறது. மேலும் சிறுபான்மையின மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் எந்தவொரு முயற்சியும் நாட்டை பிளவுபடுத்தும் மற்றும் உள் பிளவை உருவாக்கும். மக்களிடையே கசப்பை ஏற்படுத்தும். 

பெரும்பான்மைவாதம் மற்றும் சர்வாதிகாரத்தை எதிர்கொள்ள வேண்டிய நேரம் இது. புவி-அரசியல் வளர்ச்சியின் இந்த யுகத்தில் அது நம்மை பாதிப்படையச் செய்யும் மற்றும் வெளிநாட்டு தலையீட்டுக்கு அழைப்பு விடுக்கும் என்று ராஜன் கூறினார்.

மேலும், பணப் பற்றாக்குறை உள்ள இலங்கையின் உதாரணத்தை எடுத்துக் கொண்டு, “ஒரு நாடு வேலைவாய்ப்பை உருவாக்கத் தவறி சிறுபான்மையினரைத் தாக்க முயலும் போது, ​​அது எங்கும் நல்லதல்ல என்பதை நாம் தெற்கே பார்க்க வேண்டும்”.

பொருளாதார வளர்ச்சியை அடைவதில் தாராளமய ஜனநாயகத்தின் முக்கியத்துவம் குறித்தும் பேசிய ராஜன், தாராளவாத ஜனநாயகம் மற்றும் அதன் அமைப்புகளை வலுப்படுத்துவதில்தான் நமது எதிர்காலம் உள்ளது, அதை பலவீனப்படுத்துவதில் அல்ல.

“தாராளமயம் மதத்திற்கு எதிரானது அல்ல என்பதை நாம் வலியுறுத்த வேண்டும் என்றவர், ஒவ்வொருவரிடமும் நல்லதை தேடுவதே ஒவ்வொரு மதத்தின் அடிப்படை. இது தாராளவாத ஜனநாயகத்தின் சாராம்சமும் கூட." என்று ரகுராம் ராஜன் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com