இலங்கை, பாகிஸ்தான் போன்ற பொருளாதார சிக்கலை இந்தியா சந்திக்குமா? - ரகுராம் ராஜன் விளக்கம்

இலங்கை, பாகிஸ்தான் போன்ற பொருளாதார சிக்கலை இந்தியா சந்திக்குமா? என்பது குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கை, பாகிஸ்தான் போன்ற பொருளாதார சிக்கலை இந்தியா சந்திக்குமா? - ரகுராம் ராஜன் விளக்கம்

இலங்கை, பாகிஸ்தான் போன்ற பொருளாதார சிக்கலை இந்தியா சந்திக்குமா? என்பது குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானும் இலங்கையும் தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இலங்கையின் விரைவான பொருளாதார மீட்சிக்கு இந்தியா முன்வந்து உதவி வருகிறது. 

உண்மையில், பணப்பற்றாக்குறையால் வாடும் இலங்கைக்கு இந்தியா இதுவரையில்லாத வகையில் இந்த ஆண்டு 3.8 பில்லியன் டாலர் நிதியுதவி அளித்து உதவியுள்ளது. அதேசமயம், பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகளை நட்பு நாடுகளுக்கு திரும்ப வாங்கும் விருப்பத்துடன் விற்க திட்டமிட்டுள்ளது.

பொருளாதாரச் சிக்கல்கள் நிறைந்த இந்தச் சூழ்நிலையில், இந்தியப் பொருளாதாரம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியிருப்பது மூச்சு முட்ட வைக்கிறது.

இந்தியாவில் அந்நியச் செலாவணி கையிருப்பு போதுமான அளவு இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்க ரிசர்வ் வங்கி சிறப்பாக பணியாற்றி உள்ளதாகக் கூறியுள்ள ரகுராம் ராஜன், நாடு வெளிநாடுகளில் வாங்கியுள்ள கடன் அளவும் குறைவாகதான் உள்ளது என்றும், இலங்கை, பாகிஸ்தான் போன்ற பொருளாதார பிரச்னைகள் இந்தியாவுக்கு ஏற்படாது என தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரித்து வருவதாகக் கூறிய ரகுராம் ராஜன், கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தியதால், பணவீக்கம் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உலகில் உணவுப் பொருள்கள் மற்றும் எரிபொருள்களுக்கான பணவீக்கம்தான் அதிகமாகி இருப்பதாகத் தெரிவித்த ரகுராம் ராஜன், சர்வதேச அளவில் இந்த பணவீக்கம் குறையும்போது இந்தியாவிலும் குறையும் என குறிப்பிட்டார்.

சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜூலை 22 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 571.56 பில்லியன் டாலராக உள்ளது.

2022 மார்ச் இறுதியில், இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 620.7 பில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 2021 மார்ச் இறுதியில் 21.2% இல் இருந்து 2022 மார்ச் இறுதியில் 19.9% ​​ஆகக் குறைந்துள்ளது.

மேலும், குறைந்த அளவிலான வெளிநாடுகளின் கடன் மற்றும் அதிக அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகியவை இந்தியப் பொருளாதாரத்தை நெகிழ்ச்சியடையச் செய்கிறது.

மிகக் குறைந்த அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் பெருகிவரும் வெளிநாட்டுக் கடன்கள் காரணமாக இலங்கையும் பாகிஸ்தானும் ஆழ்ந்த நிதி சிக்கல்களை எதிர்கொள்கின்றன. இலங்கையின் பயன்படுத்தக்கூடிய அந்நிய செலாவணி கையிருப்பு சமீபத்தில் 50 மில்லியன் டாலராக்கும் கீழே குறைந்துள்ளது, இதனால் வெளிநாட்டு கடன்களுக்கான கொடுப்பனவுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

பாகிஸ்தானிலும் நிலைமை மோசமாக உள்ளது. பாகிஸ்தான் மத்திய வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, ஜூலை 22, 2022 இல் முடிவடைந்த வாரத்தில் பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு 754 மில்லியன் டாலாராக குறைந்து 8.57 பில்லியன் டாலராக உள்ளது.

பணவீக்கம் குறித்து, ரிசர்வ் வங்கியின் கொள்கை விகிதங்களை உயர்த்துவது பணவீக்க அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்றும்,  பருவகால காரணங்களால் உணவுப் பணவீக்கம் அதிகமாக உள்ளதாகவும், அது விரைவில் குறைய வாய்ப்புள்ளதாகவும் ராஜன் கூறினார்.

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஜூன் மாதத்தில் 7.01% ஆக இருந்தது, முந்தைய மாதத்தில் 7.04% ஆக இருந்தது, இது கச்சா மற்றும் சமையல் எண்ணெய் விலைகளை குறைப்பதற்கு உதவியது என்று சமீபத்தில் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தரவு தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com