தில்லி காவல் ஆணையராக சஞ்சய் அரோரா நியமனம்

தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த சஞ்சய் அரோராவை தில்லி காவல் ஆணையராக நியமனம் செய்து ஞாயிற்றுக்கிழமை மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 
தில்லி காவல் ஆணையராக சஞ்சய் அரோரா நியமனம்

புது தில்லி: தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த சஞ்சய் அரோராவை தில்லி காவல் ஆணையராக நியமனம் செய்து ஞாயிற்றுக்கிழமை மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

குஜராத் கேடர் ஐபிஎஸ் அதிகாரியான ராகேஷ் அஸ்தானாவுக்குப் பிறகு சஞ்சய் அரோரா  திங்கள்கிழமை தில்லி காவல் ஆணையராக பதவியேற்கிறார். 

தில்லி காவல் ஆணையராக உள்ள ராகேஷ் அஸ்தானாவுக்கு ஏற்கனவே பதிவி நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் ஓய்வு பெற்றுகிறார். 

அரோரா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சஞ்சய் அரோரா இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப்படை தலைவராகவும், சிஆர்பிஎப் சிறப்பு இயக்குநர் ஜெனரலாக மத்திய ரிசர்வ் போலீசில் பணியாற்றி வருகிறார் சஞ்சய் அரோரா ஐபிஎஸ். 

முன்னதாக இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப்படை தலைவர் எஸ்.எஸ். தேஸ்வால் பணி ஓய்வு பெறுவதால், சஞ்சய் அரோரா அந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டு பணியாற்றினார்.  

இந்நிலையில், டிஜிபி அந்தஸ்தில் உள்ள சஞ்சய் அரோரா, மத்திய அரசுப் பணிக்கு மாறுவதோடு, அவரை தில்லி காவல் ஆணையராக அறிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

டைரக்டர் ஜெனரலாகப் பணியாற்றி வரும் தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சய் அரோரா, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.1988-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரியான அரோரா, தமிழ்நாடு காவல் பிரிவில் பல்வேறு பதவிகளை வகித்தவர். சிறப்பு அதிரடிப்படை காவல் எஸ்.பி.யாகவும், வனக் கொள்ளையன் சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்கும் பணியில் சிறப்புடன்  செயல்பட்டதற்காக முதல்வரின் வீரதீர செயலுக்கான விருதும் பெற்றுள்ளார். 

தேசிய பாதுகாப்புப் பணியில் பயிற்சி பெற்ற பின்னர் 1991 ஆம் ஆண்டு சிறப்பு படை அமைப்பதில் முக்கிய பங்காற்றிய அரோரா,  எல்,டி.டி.இ. செயல்பாடுகள் நிறைந்த காலத்தில் முதல்வர் பாதுகாப்புப் பணியில் இந்த சிறப்பு பாதுகாப்புப் படையில் செயல்பட்டது.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளாராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். 

2002 முதல் 2004 வரை கோயம்புத்தூர் காவல் ஆணையராகவும், விழுப்புரம் சரக டிஐஜியாகவும், ஊழல் கண்காணிப்பு மற்றும் ஒழிப்பு துணை இயக்குநராகவும், சிஆர்பிஎஃப் மற்றும் பிஎஸ்எஃப் ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார்.

குடியரசுத் தலைவரின் காவல் துறை பதக்கம், ஐ.நா அமைக் குழு பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்களை பெற்றுள்ளார். 

சஞ்சய் அரோரா  ஜெய்ப்பூர் மாளவியா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் பி.டெக் பட்டம் பெற்றுள்ளார். 

இதற்கு முன்பு 1984-பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அஸ்தானா, ஜூலை 2021-இல் தில்லியின் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார், 1966-பேட்ச் உத்தரப்பிரதேச கேடர் ஐபிஎஸ் அதிகாரியான அஜய் ராஜ் சர்மா 1999-இல் தில்லி காவல்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com