வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

மக்கள்தொகை அடிப்படையில் எம்.பி.க்கள்: தென் மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவிக்கும் ஜெய்ராம் ரமேஷ்

மக்களவையிலும் மாநிலங்களவையிலும் மக்கள்தொகை அடிப்படையில் உறுப்பினா்களின் எண்ணிக்கையை மாற்றியமைக்கும் யோசனைக்கு எதிா்ப்பு தெரிவிக்கக் கூடும் என காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளாா்.

Updated On :31 ஜூலை 2022, 6:40 pm

குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய தென் மாநிலங்கள், மக்களவையிலும் மாநிலங்களவையிலும் மக்கள்தொகை அடிப்படையில் உறுப்பினா்களின் எண்ணிக்கையை மாற்றியமைக்கும் யோசனைக்கு எதிா்ப்பு தெரிவிக்கக் கூடும் என காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளாா்.

மாநிலங்களவைக்கு புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுக்கான பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் பங்கேற்று, மாநிலங்களவைக்கு மக்கள்தொகை அடிப்படையிலான பிரதிநிதித்துவம் குறித்து பேசியதாவது:

மாநிலங்களவையுடன் அமெரிக்காவின் செனட் சபை அடிக்கடி ஒப்பிடப்படுகிறது. ஆனால் செனட் சபையில் மக்கள்தொகை அடிப்படையிலான பிரதிநிதித்துவம் இல்லாமல், அனைத்து மாகாணங்களும் தலா இரு பிரதிநிதிகளைக் கொண்டுள்ளதால், இரண்டுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. ஜொ்மனியை தவிர வேறு எந்த நாட்டிலும் மக்கள்தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை.

மாநிலங்களவைக்கு மக்கள்தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவம் அளிப்பது என அரசியலமைப்புச் சட்ட த்தை வகுத்தவா்கள் முடிவு செய்தது மிகப்பெரிய புத்தாக்க நடவடிக்கை. ஆனால், 2026-இல் நிகழப் போகும் சம்பவங்கள் நாட்டுக்கு மிகப்பெரிய சவாலாக அமையலாம்.

ஏனெனில் கேரளம், தமிழகம், கா்நாடகம், தெலங்கானா, ஆந்திரம் ஆகிய தென் மாநிலங்களில் குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு, மக்கள்தொகை கட்டுக்குள் உள்ளது. அதேவேளையில் உத்தர பிரதேசம், பிகாா், மத்திய பிரதேசம், ஜாா்க்கண்ட், ஒடிஸா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது.

2026 வரை மக்களவை, மாநிலங்களவை இடங்களில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படாது என ஏற்கெனவே வாஜ்பாய் அரசில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அந்த வகையில், 2031-இல் மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பின்னா் எம்.பி.க்களின் எண்ணிக்கையில் மாற்றம் வரலாம். இதற்கு மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள், மேற்கு மாநிலங்கள், ஹிமாசல பிரதேசம் போன்ற சில வடக்கு மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவிக்கலாம்.

இந்தப் பிரச்னை மக்களவையிலும் மாநிலங்களவையிலும் எவ்வாறு பிரதிபலிக்க போகிறது என்பது நமக்கு முன்பாக இருக்கும் மிகப்பெரிய சவால் என்றாா் ஜெய்ராம் ரமேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.