பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவில் உயர்ந்த நெய், சமையல் எண்ணெய்!

பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவில் உயர்ந்த நெய், சமையல் எண்ணெய்!

இலங்கையை போன்று பாகிஸ்தானிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் சமையல் எண்ணெய் மற்றும் நெய் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 
Published on

இலங்கையை போன்று பாகிஸ்தானிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் சமையல் எண்ணெய் மற்றும் நெய் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 

பாகிஸ்தானில் கடந்த சில நாள்களுக்கு முன்னதாக பெட்ரோல், டீசலின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, முன்னெப்போதும் இல்லாத வகையில் சமையல் எண்ணெய் மற்றும் நெயின் விலை தற்போது உயர்ந்துள்ளது. 

சமையல் எண்ணெய் ஒரு லிட்டர் ரூ.213 அதிகரித்து ரூ.605 ஆகவும், நெய் கிலோவுக்கு ரூ.208 அதிகரித்து ரூ.555 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

நாடு தொடர்ந்து பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் இந்த அறிவிப்பு மக்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com