பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து அமைச்சர் அமித் ஷா இன்று ஆலோசனை

வெள்ள பாதிப்பை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை(இன்று) மாலை உயர்மட்டக் கூட்டத்தை நடத்த உள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :2 ஜூன் 2022, 8:18 am

DIN

புது தில்லி:  பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் வெள்ள பாதிப்பை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை (இன்று) மாலை உயர்மட்டக் கூட்டத்தை நடத்த உள்ளார்.

உள்துறை அமைச்சக அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. கேரளத்தில் பருவமழை  இந்த ஆண்டு மூன்று நாள்களுக்கு முன்னதாக மே 29 ஆம் தேதி தொடங்கியுள்ளது.  

நீர்வளத்துறை  அமைச்சர் கஜேந்திர ஷெகாவத், மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா, இந்திய வானிலை ஆய்வுத் துறை இயக்குநர், தேசிய பேரிடர் மீட்புப் படையின் இயக்குநர், மத்திய நீர் ஆணையத்தின் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

அணைகளின் நீர்மட்டத்தை அதிகரிக்கவும், வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்காக,  அணைகளை தூர்வாரும் வழிமுறையை உருவாக்க ஜல் சக்தி அமைச்சகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.