

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 3 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
புதிய நீதிபதிகளான புருஷேந்திர குமார் கௌரவ், அனிஷ் தயாள் மற்றும் அமித் ஷர்மா ஆகியோருக்கு தில்லி உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி விபின் சங்கி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தில்லி உயர்நீதிமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 60-இல், தற்போது, நீதிபதிகளின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது..
இதையும் படிக்கலாம்: சத்யேந்தர் ஜெயினின் பொறுப்புகள் மணீஷ் சிசோடியாவிடம் ஒப்படைப்பு
முன்னதாக கடந்த மே 18இல் தில்லி உயர்நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து இன்று பதவியேற்றுக் கொண்ட, நீதிபதி கௌரவ் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் இருந்து தில்லி உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
அமித் சர்மா உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக 2 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
வழக்குரைஞர் அனிஷ் தயாள் மற்றும் அமித் ஷர்மா ஆகியோரின் பெயர்கள் நவம்பர் 2021இல் தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வுக்காக உச்சநீதிமன்ற கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.