மும்பை: இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலில் அதானி குழும நிர்வாகி கௌதம் அதானியை பின்னிக்குத் தள்ளி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவா் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
ப்ளூம்பெர்க் பணக்காரர்களுக்கான குறியீட்டுப் பட்டியலின்படி, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 99.07 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. அதே வேளையில் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 98.7 பில்லியன் டாலர்களாக உள்ளன.
இந்தியா மற்றும் ஆசிய அளவில் முதலிடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, உலகளவில் மிகப் பணக்காரர்களின் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறார். கௌதம் அதானி ஆசிய அளவில் இரண்டாவது இடத்திலும் உலக பணக்காரர்கள் பட்டியலில் அம்பானிக்கு அடுத்து ஒன்பதாவது இடத்திலும் உள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடட் நிறுவனத்தின் பங்குகள் 16 சதவீதம் லாபம் அதிகரித்ததே இந்த மாற்றத்துக்குக் காரணம். அதானி குழும நிறுவனப் பங்குகளின் விலை உயர்வால் சில மாதங்கள் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலில் கௌதம் அதானி முதலிடம் வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்த வார ஓடிடி படங்கள்!

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு

போர்நிறுத்தம்! டிரம்ப்பின் அறிவிப்பை மீறி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்!
கொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


