ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஹைதராபாத் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: இருவர் கைது 

ஹைதராபாத்தில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

News image
கோப்புப்படம்
Updated On :4 ஜூன் 2022, 5:18 am

DIN

ஹைதராபாத்தில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஹைதராபாத்தின் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் தோழியுடன் மதுபான விடுதிக்குச் சென்றிருக்கிறார். அவரது தோழி விரைவாகச் சென்றுவிட, சிறுமி அங்கிருந்த சிறுவர்களுடன் பேசியுள்ளார். அவர்கள் சிறுமியை காரில் வீட்டில் விட்டுவிடுவதாகக் கூறி அழைத்துச் சென்றனர். அப்போது காரிலேயே அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

இரு தினங்களுக்குப் பிறகு சிறுமி இதுகுறித்து தன் தந்தையிடம் கூறவே, சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், நேற்று சாதுதீன் மாலிக் என்ற மாணவரை கைது செய்துள்ளனர். இதையடுத்து மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் அரசியல் பிரமுகர்களின் மகன்கள் சம்மந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

ஓடும் காரில் சிறுமி ஒருவரை 5 பள்ளி மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.