கரோனா பாதித்தவர்கள் 7 நாள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்: ஃபிஜி

கரோனா பாதித்தவர்கள் 7 நாள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்: ஃபிஜி

கரோனா பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் 7 நாள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என்று பிஜியின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
Published on

கரோனா பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் 7 நாள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என்று பிஜியின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கரோனா நேர்மறை சோதனை செய்யப்பட்டவர்கள் கட்டாயம் ஏழு நாள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும், கரோனா பதிவாகிய பிறகு வேலைக்கு அல்லது பள்ளிக்குச் செல்லக்கூடாது என்று பிஜியின் நிரந்தர சுகாதார செயலாளர் ஜேம்ஸ் ஃபாங் வலியுறுத்தியுள்ளார். 

பிஜியில் தொடர்ந்து அதிகரித்துவரும் போக்கை நாங்கள் காண்கிறோம். தடுப்பூசி போடாமல் இருந்தாலோ அல்லது பூஸ்டர் எடுத்துக்கெள்ளலாமல் இருப்பவருக்கு கடுமையான நோய்த் தொற்று மற்றும் இறப்பு ஏற்படுகிறது. 

எனவே, பூஸ்டர் டோஸ் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பாதுகாப்பு சிறப்பாக இருக்கும். மீதமுள்ள பொது சுகாதார நடவடிக்கைகளை அகற்றுவது பாதுகாப்பானது என்றும் அமைச்சகம் கூறியது.

தற்போது, ​​18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு 80 சதவீத பூஸ்டர் தடுப்பூசியை அமைச்சகம் வழங்கி வருகிறது.

சுமார் 9,00,000 மக்கள்தொகை கொண்ட தென் பசிபிக் தீவு நாடான பிஜியில் கடந்த மூன்று நாள்களில் 53 பேருக்கு கரோனா பதிவாகியுள்ளன. இதையடுத்து மொத்த கரோனா வழக்குகளின் எண்ணிக்கை 65,000-ஐ தாண்டியுள்ளது. இதுவரை மொத்தம் 865 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com