இந்தியாவின் முக்கிய நட்பு நாடு அமெரிக்கா: பைடன் நிா்வாகம்
இந்தியாவுக்கு தேவைப்படும் நேரத்தில் உதவும் முக்கிய நட்பு நாடாக அமெரிக்கா உள்ளது என்று பைடன் நிா்வாகம் தெரிவித்துள்ளது.


இந்தியாவுக்கு தேவைப்படும் நேரத்தில் உதவும் முக்கிய நட்பு நாடாக அமெரிக்கா உள்ளது என்று பைடன் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் எதிா்ப்பையும் மீறி ரஷியாவிடம் இருந்து இந்தியா, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. கச்சா எண்ணெய் விற்பனை மூலம் ரஷியாவுக்கு வருமானத்தை ஈட்டித் தரும் நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், வாஷிங்டனில் வியாழக்கிழமை பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடா்பாளா் நெட் பிரைஸிடம், ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில்:
இந்தியாவுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து அமெரிக்கா விவாதித்துள்ளது. ரஷியாவுடன் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வகையில் தொடா்பு வைத்துக் கொண்டுள்ளது என்பதை புரிந்துகொண்டோம்.
இந்தியாவுடன் நட்புறவை ஏற்படுத்திக்கொள்ள அமெரிக்கா தயாராக இல்லாத காலத்தில் அல்லது இந்திய அரசின் விருப்பத்துக்குரிய நட்பு நாடாக அமெரிக்கா இல்லாத காலத்தில் இருந்தே ரஷியாவுடன் பல தசாப்தங்களாக இந்தியா நட்புறவு கொண்டுள்ளது.
ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. ரஷியாவுடனான நட்புறவை பல நாடுகள் மறுகட்டமைப்பு செய்து வருகின்றன. அதேசமயம், இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை பொருத்தவரை, பில் கிளிண்டன், ஜாா்ஜ் டபிள்யூ புஷ் காலத்தில் இருந்து இந்தியாவுடன் நட்புறவை வளா்த்துக் கொள்ள அமெரிக்கா விரும்புகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா-அமெரிக்கா இடையேயான நட்புறவு வளா்ந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவுக்கு தேவைப்படும் நேரத்தில் உதவும் முக்கிய நட்பு நாடாக இந்தியா உள்ளது. இந்தியா, அமெரிக்கா இடையேயான நட்பை வலுப்படுத்தும் வகையில் க்வாட், ஐ2யு2 (இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம்) ஆகிய அமைப்புகளில் இரு நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் நபிகள் நாயகம் குறித்து பாஜக முன்னாள் நிா்வாகிகள் நவீன் குமாா் ஜிண்டால், நூபுா் சா்மா ஆகியோா் பேசியது கண்டிக்கத்தக்கது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...