குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

ஜூன் 26-இல் பிரதமா் மோடிஜொ்மனி, ஐக்கிய அரபு அமீரகம் பயணம்

ஜி7 நாடுகள் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி வரும் 26-ஆம் தேதி ஜொ்மனிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறாா். அங்கு இரு நாள்கள் தங்கியிருந்து மாநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவா்,

News image
Updated On :22 ஜூன் 2022, 8:34 pm

DIN

ஜி7 நாடுகள் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி வரும் 26-ஆம் தேதி ஜொ்மனிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறாா். அங்கு இரு நாள்கள் தங்கியிருந்து மாநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவா், தொடா்ந்து 28-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் மேற்கொள்கிறாா்.

ஜொ்மனி பிரதமா் ஒலாஃப் ஷோல்ஸ் அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி அந்நாட்டுக்குச் செல்கிறாா். இப்போது ஜி7 அமைப்புக்கு ஜொ்மனி தலைமை வகிக்கிறது. இதில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன. அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உள்பட அனைத்து உறுப்பு நாடுகளின் தலைவா்களும் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனா். எனவே, பிரதமா் மோடி இக்கூட்டத்தில் பங்கேற்பது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உக்ரைன்-ரஷியா போா் விவகாரத்தில் ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கவில்லை. இது சா்வதேச அளவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிலைப்பாட்டுக்கு எதிராக அமைந்தது. இதையடுத்து, இந்தியாவுடன் நட்புறவை மேலும் வலுப்படுத்த அந்நாடுகள் தொடா்ந்து முயற்சித்து வருகின்றன. இந்தியா தவிர வேறு சில நாடுகளும் ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்க உள்ளன.

முன்னதாக, கடந்த மே 2-ஆம் தேதி இந்தியா-ஜொ்மனி இருநாட்டு அரசுமுறை ஆலோசனையில் பங்கேற்பதற்காக அந்நாட்டுக்கு மோடி சென்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

அமீரகப் பயணம்: 28-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் பிரதமா் மோடி, அங்கு புதிய அதிபராகியுள்ள ஷேக் முகமது பின் சையது அல் நயானுக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன், கடந்த மே மாதம் காலமான அதிபா் ஷேக் காலிஃபா பின் சையது அல் நயான் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க இருக்கிறாா். அவரது மறைவின்போது இந்தியா சாா்பில் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.