அரசியல் குழப்பம்: இன்று மாலை சிவசேனை எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

மகாராஷ்டிர அரசியலில் குழப்பம் நீடித்து வரும் சூழலில், சிவசேனை கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே (கோப்புப்படம்)
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே (கோப்புப்படம்)

மகாராஷ்டிர அரசியலில் குழப்பம் நீடித்து வரும் சூழலில், சிவசேனை கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.

சிவசேனை கட்சிக்கு எதிராகத் திரும்பியுள்ள ஏக்நாத் ஷிண்டே மற்றும் எம்எல்ஏக்களால் சிவசேனை கூட்டணியின் பலம் குறைந்துள்ளதால் மகாராஷ்டிரத்தில் தற்போதைய கூட்டணியின் பலம் குறைந்திருக்கிறது.

இதனால் மகாராஷ்டிரத்தில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இணைந்த 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி ஆட்சி கவிழும் சுழல் எழுந்துள்ளது.

மகாராஷ்டிர அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற்ற நிலையில், சிவசேனை எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் மாலை நடைபெறும் என்று கட்சியின் கொறடா சுனில் பிரபு அறிவித்துள்ளார்.

மேலும், கூட்டத்தில் பங்கேற்காத எம்.எல்.ஏ.க்கள் கட்சியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாக கருதப்படும். அனுமதியின்றி யாரேனும் கூட்டத்தை தவிர்க்கும் பட்சத்தில், அரசியலமைப்பு விதிகளின்படி அவர்கள் அடிப்படை உறுப்பினர் பதவியும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com