புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ராஜிநாமா செய்யத் தயார்: மகாராஷ்டிர முதல்வர் உத்தவ்

முதல்வராகத் தொடர வேண்டாம் என ஏதேனும் ஒரு எம்எல்ஏ விரும்பினால்கூட தான் பொறுப்பிலிருந்து விலகத் தயார் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

News image
Updated On :22 ஜூன் 2022, 2:20 pm

DIN


முதல்வராகத் தொடர வேண்டாம் என ஏதேனும் ஒரு எம்எல்ஏ விரும்பினால்கூட தான் பொறுப்பிலிருந்து விலகத் தயார் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று (புதன்கிழமை) மாலை உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

"எங்கள் எம்எல்ஏ-க்களுக்கு என்ன நடக்கிறது, அவர்கள் எங்கே போகிறார்கள், எங்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்பது பற்றி பேச நான் விரும்பவில்லை. சிலர் இது பாலாசாகேப்பினுடைய சிவசேனை இல்லை என்கிறார்கள். பாலா சாகேப்பின் சிந்தனைகள் என்ன என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும். அவரது காலத்திலிருந்த அதே சிவசேனைதான் இதுவும். ஹிந்துத்வாதான் எங்கள் வாழ்க்கை.

கடந்த சில மாதங்களாக என்னைப் பார்க்க முடியவில்லை என்பது உண்மைதான். இதற்கு அறுவை சிகிச்சை மற்றும் உடல்நிலைதான் காரணம். ஆனால், தற்போது மக்கள் என்னைச் சந்திக்கத் தொடங்கிவிட்டனர்.

2019-இல் 3 கட்சிகளும் ஒன்றிணைந்தபோது, முதல்வர் பொறுப்பை ஏற்குமாறு சரத் பவார் என்னிடம் கூறினார். எனக்கு எந்தவொரு முன் அனுபவமும் கிடையாது. ஆனால், நான் பொறுப்பேற்றுக்கொண்டேன். சரத் பவாரும், சோனியா காந்தியும் என்மீது நம்பிக்கை வைத்து நிறைய உதவியுள்ளனர்.

ஆனால், என் சொந்த மக்களுக்கு (எம்எல்ஏ-க்கள்) நான் வேண்டாம் என்றால், நான் என்ன சொல்வது. எனக்கு எதிராக ஏதேனும் உள்ளது என்றால் அதே சூரத்திலிருந்து ஏன் சொல்ல வேண்டும். நேராக இங்கு வந்து என் முகத்திற்கு முன்பே கூறலாமே. 

ஏதேனும் ஒரு எம்எல்ஏ-வுக்குகூட நான் முதல்வராகத் தொடர வேண்டாம் என்று இருந்தால், முதல்வர் இல்லத்தை காலி செய்ய நான் தயார்.  

எம்எல்ஏ-க்களிடம் ராஜிநாமா கடிதத்தைக் கொடுக்க நான் தயார். அவர்கள் இங்கு வந்து என் ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். சிவசேனை கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்தும் விலக நான் தயார். இது மற்றவர்களுக்காக அல்ல, என் தொண்டர்களுக்காக.

நீங்கள் (எம்எல்ஏ-க்கள்) சொன்னால், நான் முதல்வர் பதவியிலிருந்து விலக் தயார். எத்தனை பேர் எனக்கு எதிராக உள்ளனர் என்ற எண்ணிக்கை அல்ல இது. ஒருவர் எனக்கு எதிராக இருந்தாலும் நான் விலகுவதற்குத் தயார். ஒரு எம்எல்ஏ எனக்கு எதிராக இருந்தால்கூட அது எனக்கு வெட்கத்துக்குரியது" என்று உத்தவ் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.