மாணவர்கள் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள யோகி கூறிய ஆலோசனை!

பள்ளி மாணவர்கள் தங்களைப் புதுப்பித்த நிலையில் வைத்துக்கொள்ளப் புத்தகம் மற்றும் செய்தித்தாள்களை வாசிப்பது அவசியம் என்று அறிவுறுத்தியுள்ளார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். 
மாணவர்கள் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள யோகி கூறிய ஆலோசனை!
Published on
Updated on
1 min read

பள்ளி மாணவர்கள் தங்களைப் புதுப்பித்த நிலையில் வைத்துக்கொள்ளப் புத்தகம் மற்றும் செய்தித்தாள்களை வாசிப்பது அவசியம் என்று அறிவுறுத்தியுள்ளார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தகுதிப் பட்டியலில் இடம்பிடித்த 10 மாணவர்களை இன்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது இல்லத்தில் நடந்த கூட்டத்தில் சந்தித்துப் பேசினார். 

அப்போது அவர் மேலும் கூறியதாவது, 

மாணவர்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைத் தொடங்கியுள்ளன. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

மாணவர்கள் உங்களைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்க புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களை அவசியம் வாசிக்க வேண்டும். அப்போதுதான் உங்களைச் சுற்றியுள்ள விஷயங்களைப் பற்றிய பரந்த கண்ணோட்டத்தைப் பெற முடியும் என்றார். 

இதையும் வாசிக்கலாம்: ஓரங்கட்டப்படுகிறாரா ஓபிஎஸ்?

மாணவர்கள் தேர்வுக்குத் தயாராவதற்கான வழிகள் குறித்தும், அதற்காக அவர்கள் கடைப்பிடித்த உத்திகள் குறித்தும் பள்ளி முதல்வர்களிடம் முதல்வர்  யோகி கேட்டறிந்தார். 

மேலும், அப்யுதயா திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றார். 

உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்க மாணவர்கள் அதிகாலை விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com