4-வது நாளாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் மூடப்பட்டுள்ளது. 
4-வது நாளாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் மூடப்பட்டுள்ளது. 

ராம்பன் மற்றும் உதம்பூர் மாவட்டங்களில் 33 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள், மண்சரிவுகள் மற்றும் உருண்டுவிழுந்த கற்கள் காரணமாக நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டது. மேலும் 150 அடி நீளமுள்ள சாலை மற்றும் கட்டுமானத்தில் உள்ள பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது. 

வியாழன் மாலை நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளுக்கு இடையூறாக இருந்த கற்பாறைகளை தகர்க்க வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டன.

உதம்பூர் மாவட்டத்தில் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு இடையூறாக இருக்கும் பாறைகளை வெடிக்கச் செய்ததற்கு மத்தியில் பனிஹால்-ராம்பன்-உதம்பூர் பிரிவில் மறுசீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து பாண்டியாலில் செவ்வாய்க்கிழமை கற்கள் உருண்டதால் நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டது.

சாலை துப்புரவு பணியை நேரில் கண்காணித்து வரும் துணை ஆணையர் ராம்பான், முசரத் இஸ்லாம் கூறுகையில், 
சிக்கித் தவிக்கும் பயணிகளின் இரவு தங்குவதற்கும் உணவுக்கும் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது என்றார்.

நெடுஞ்சாலையில் பயணத்தைத் தொடங்கும் முன் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொள்ளுமாறு அவர் பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com