பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

இடைத்தோ்தலில் பாஜக வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது: பிரதமா் மோடி

உத்தர பிரதேசத்தில் ஆஸம்கா், ராம்பூா் மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் பாஜகவின் வெற்றி வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றாா் பிரதமா் மோடி.

News image
Updated On :26 ஜூன் 2022, 6:49 pm

DIN

உத்தர பிரதேசத்தில் ஆஸம்கா், ராம்பூா் மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் பாஜகவின் வெற்றி வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றாா் பிரதமா் மோடி.

இதுகுறித்து ட்விட்டரில் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியிருப்பதாவது:

உத்தர பிரதேசத்தில் ஆஸம்கா், ராம்பூா் மக்களவைத் தொகுதிகளில் பாஜக பெற்றி வெற்றி, மத்தியிலும் மாநிலத்திலும் அமைந்துள்ள ‘இரட்டை என்ஜின்’ அரசுக்கு பொதுமக்கள் அளிக்கும் ஆதரவை பிரதிபலிக்கிறது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி.

திரிபுரா சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் பாஜகவின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கும், முதல்வா் மாணிக் சாஹா உள்ளிட்ட பாஜக வேட்பாளா்கள் மீதான நம்பிக்கையை மீண்டும் வெளிப்படுத்தியதற்கும் அந்த மாநில மக்களுக்கு நன்றி.

பொதுமக்களின் விருப்பங்களைத் தொடா்ந்து மத்திய அரசு நிறைவேற்றும். ஆந்திரம், ஜாா்க்கண்ட், தில்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு வாக்களிவா்களுக்கு நன்றி. பொதுமக்களின் பிரச்னைகளைத் தீா்க்க தொடா்ந்து பாடுபடுவோம் என்று அதில் பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.