தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

யஷ்வந்த் சின்ஹவுக்கு ஓவைசி கட்சி ஆதரவு: குடியரசுத் தலைவர் தேர்தல்

குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹவுக்கு அசாதுதீன் ஓவைசியின் மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

News image
ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி
Updated On :27 ஜூன் 2022, 1:06 pm

DIN


குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹவுக்கு அசாதுதீன் ஓவைசியின் மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 17 கட்சிகள் இணைந்து பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹவை நிறுத்தியுள்ளனர்.

புது தில்லியில் இன்று தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை செயலரிடம், யஷ்வந்த் சின்ஹா இன்று காலை தனது வேட்புமனுவை அளித்தார்.

இந்நிலையில், யஷ்வந்த் சின்ஹவுக்கு அதரவளிப்பதாக ஓவைசி அறிவித்துள்ளார். இதுகுறித்து ஓவைசி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “குடியரசுத் தலைவர் தேர்தலில் மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சி வாக்காளர்கள் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹவுக்கு வாக்களிப்பார்கள். முன்னதாக சின்ஹ என்னுடன் தொலைபேசியில் பேசினார்.” என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, யஷ்வந்த் சின்ஹவுக்கு தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.