
கேரளத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் கவலைப்பட ஒன்றுமில்லை என்றாலும், மக்கள் முகக்கவசம் அணிவது, தடுப்பூசி போடுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அம்மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் புதன்கிழமை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,
ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் தற்போதைக்கு விதிக்கப்பட வாய்ப்பில்லை. ஆனால் கரோனா பரவுவதைத் தடுப்பதில் அனைவரும் ஒத்துழைத்து கவனம் செலுத்த வேண்டும்.
ஜூன் 28 வரை மாநிலத்தில் புதிதாக 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட புதிய வழக்குகள் பதிவாகியதையடுத்து, செயலில் உள்ளவர்களின் எண்ணிக்கை 27,991 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா நிலைமையை மதிப்பிடுவதற்கு சுகாதாரத் துறை தொடர்ந்து கூட்டங்களைக் கூட்டி வருவதால் கவலைப்பட ஒன்றுமில்லை. நோய்க்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில் 1,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், செயலில் உள்ள 27,991 பேரில் 1,285 பேர் அவசர சிகிச்சைப் பிரிவிலும், 42 பேர் வெண்டிலேட்டர்களிலும் இருப்பதாகவும் அவர் கூறினார்.
முதியவர்கள், தடுப்பூசி போடாதவர்கள் ஆகியோர் கரோனாவால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவே, அத்தகைய நபர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
மேலும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் உடனே சிகிச்சை பெற்று, பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.