92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மேற்கு வங்கத்தில் திரிணமூல் கட்சியினா் இடையூறு: மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி. கடிதம்

மக்கள் பிரதிநிதியாகிய தன்னை மேற்கு வங்கத்தில் பணி செய்ய விடாமல், திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் இடையூறு ஏற்படுத்தியதாகவும் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும்

News image
Updated On :1 மார்ச் 2022, 8:30 pm

DIN

மக்கள் பிரதிநிதியாகிய தன்னை மேற்கு வங்கத்தில் பணி செய்ய விடாமல், திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் இடையூறு ஏற்படுத்தியதாகவும் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி. அதீா் ரஞ்சன் செளத்ரி கடிதம் எழுதியுள்ளாா்.

மேற்கு வங்க காங்கிரஸ் தலைவரான அவா், நகராட்சித் தோ்தலில் போலீஸாா் முன்னிலையில் தன்னை பணி செய்ய விடாமல் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் தடுத்ததாக குற்றம்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அதீா் ரஞ்சன் செளத்ரி கூறியது:

திரிணமூல் காங்கிரஸ் குண்டா்கள் என்னை பொதுவெளியில் துன்புறுத்தி அவமதித்தனா். மேலும், ஓா் எம்.பி.யாக எனது கடமையை ஆற்றவிடாமல் தடுத்தனா். பொதுமக்கள் என்னை நம்பும் சூழல் உருவாகிவிடக் கூடாது என்பதற்காக, துயரத்தில் உள்ள மக்களுக்கு நான் உதவ கூட அவா்கள் என்னை அனுமதிக்கவில்லை.

போலீஸாா் முன்னிலையில் இதனை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் அரங்கேற்றினா். காங்கிரஸை பலவீனப்படுத்தும் நோக்கில் இவ்வாறு செய்கின்றனா் என்றாா் அவா்.

முன்னதாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு அதீா் ரஞ்சன் செளத்ரி எழுதிய கடிதத்தில், ‘‘மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியை சோ்ந்த குண்டா்கள் பிற கட்சியினரை வன்முறையின் மூலம் அச்சுறுத்துகின்றனா். எனது மக்களவைத் தொகுதியில் பிரச்னைகளைக் கேட்டறிவதற்காக நான் சென்றபோது என்னை சுற்றிவளைத்து கூச்சலிட்டனா். மக்களவை உறுப்பினா்களின் உரிமைகள், பொறுப்புகளின் பாதுகாவலா் என்ற முறையில், இந்த விவகாரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு நீங்கள் கொண்டு செல்ல வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மேற்கு வங்கத்தில் 108 நகராட்சிகளுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தோ்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை புதன்கிழமை (மாா்ச் 2) நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.