விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மே 6இல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான கேதார்நாத் கோயில் யாத்ரீகர்களுக்காக இந்தாண்டு மே 6-ஆம் தேதி காலை 6.25-க்கு கோயிலின் நடை திறக்கப்படுகிறது. 

News image
Updated On :1 மார்ச் 2022, 9:39 am

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான கேதார்நாத் கோயில் யாத்ரீகர்களுக்காக இந்தாண்டு மே 6-ஆம் தேதி காலை 6.25-க்கு கோயிலின் நடை திறக்கப்படுகிறது. 

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஓம்காரேஷவர் கோயிலில் நடைபெற்ற வழிபாடுகளுக்குப் பிறகு சிவபெருமானின் பிரசித்தி பெற்ற இமயமலை கோயிலைத் திறப்பதற்கான தேதி மற்றும் நேரம் அறிவிக்கப்பட்டது. 

விருச்சிக லக்னத்தில் கோயில் கதவுகள் திறக்கப்படும் என்று பத்ரி-கேதார் கோயில் கமிட்டி அதிகாரி ஹரிஷ் கௌட் கூறினார். கேதார்நாத் தலைமை பூசாரி ராவல் பீமாசங்கர் லிங் மற்றும் பத்ரி-கேதார் கோயிலின் சமிதி தலைவர் அஜேந்திர அஜய் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

சிவபெருமானின் பஞ்சமுகி(ஐந்து முகம்) சிலை மே 2ஆம் தேதி இங்குள்ள ஓம்காரேஷ்வர் கோயிலில் இருந்து கேதார்நாத்திற்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் புறப்படும் என்று கௌட் கூறினார். 

குளிர்காலத்தையொட்டி கடந்தாண்டு நவம்பரில் கோயில் நடை சாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.