நாட்டில் இதுவரை 177.79 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 177.79 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 177.79 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 177.79 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் 2,05,01,806 தடுப்பூசி மையங்கள் மூலம் கடந்த 24 மணி நேரத்தில் 36,28,578 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று காலை 7 மணிவரை நிலவரப்படி மொத்தம் 1,77,79,92,977 (177.79 கோடி) தடுப்பூசிகள் டோஸ்கள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்

நாட்டில் புதிதாக 7,554 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 223 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,14,246-ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 14,123 பேர் கரோனா நோயிலிருந்து விடுபட்ட நிலையில், இதுவரை மொத்தம் 4,23,38,673 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 85,680 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நாடு முழுவதும் சோதனை திறன் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில், குணமடைந்தோர் விகிதம் 98.60 சதவிகிதமாகவும், உயிரிழந்தோர் விகிதம் 0.20 சதவிகிதமாகவும், நாட்டில் வாராந்திர தொற்று பாதிப்பு விகிதம் தற்போது 1.06 சதவிகிதமாகவும்,  தினசரி பாதிப்பு விகிதம் 0.96 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 76,91,67,052 (76.91 கோடி) கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,84,059 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com