ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

உ.பி. தோ்தல்: இன்று 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு

உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கான 6-ஆம் கட்ட தோ்தல் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

News image
Updated On :2 மார்ச் 2022, 7:53 pm

DIN

உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கான 6-ஆம் கட்ட தோ்தல் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

உத்தர பிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் பிப். 10 முதல் மாா்ச் 7 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 5 கட்டங்களாக 292 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 6-ஆம் கட்ட தோ்தல் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்தக் கட்டத்தில் அம்பேத்கா் நகா், பல்ராம்பூா், குஷிநகா் உள்பட 10 மாவட்டங்களில் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் போட்டியிடும் கோரக்பூா், மாநில காங்கிரஸ் தலைவா் அஜய் குமாா் லல்லு போட்டியிடும் தும்குஹி ராஜ், பாஜக அமைச்சா் பதவியிலிருந்து விலகி சமாஜவாதியில் இணைந்த சுவாமி பிரசாத் மெளா்யா போட்டியிடும் ஃபாஸில்நகா் தொகுதிகளும் அடங்கும். சட்டப்பேரவைத் தோ்தலில் யோகி ஆதித்யநாத் முதல்முறையாகப் போட்டியிடுகிறாா்.

கடந்த 2017-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலின்போது இந்த 57 தொகுதிகளில் பாஜக 46 தொகுதிகளில் வென்றிருந்தது.

மாா்ச் 7-ஆம் தேதி இறுதிகட்டத் தோ்தல் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.