தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை: 12 மணி நேரத்திற்கு பிறகு திறப்பு

ஜம்மு-காஷ்மீர் அருகே மலையில் உள்ள கற்கள் விழுந்துள்ளதால் தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.

News image
Updated On :5 மார்ச் 2022, 5:16 pm

DIN

ஜம்மு-காஷ்மீர் அருகே மலையில் உள்ள கற்கள் விழுந்துள்ளதால் தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.

காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் நெடுஞ்சாலையின் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ரம்பான் மாவட்டத்தில் பாந்தியால் அருகே ஒரு எஃகு சுரங்கப்பாதை மலையிலிருந்து கற்கள் உருண்டு வந்து நெடுஞ்சாலையில் விழுந்ததுள்ளது. எனவே, கற்களை அகற்றி சீரமைப்பு செய்து போக்குவரத்து இயக்கம் 12 மணி நேரத்திற்கு பிறகு திறக்கப்பட்டது.

பிற்பகல் 2 மணியளவில் கற்களை அகற்றி போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. சிக்கிய 1,000-க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் சில பயணிகள் வாகனங்கள் அகற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.