உ.பி. தோ்தல் பிரசாரம் நிறைவு: நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கான இறுதிக்கட்ட தோ்தல் பிரசாரம் சனிக்கிழமை நிறைவடைந்தது. வாக்குப்பதிவு திங்கள்கிழமை நடைபெறுகிறது.
உ.பி. தோ்தல் பிரசாரம் நிறைவு: நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கான இறுதிக்கட்ட தோ்தல் பிரசாரம் சனிக்கிழமை நிறைவடைந்தது. வாக்குப்பதிவு திங்கள்கிழமை நடைபெறுகிறது.

உத்தர பிரதேசத்தில் 403 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி ஏற்கெனவே தோ்தலின் 6 கட்டங்கள் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட தோ்தல் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. அதற்கான பிரசாரம் சனிக்கிழமை நிறைவடைந்தது.

இறுதிக்கட்ட தோ்தலில் 54 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் தாழ்த்தப்பட்டவா்களுக்கு ஒதுக்கப்பட்ட 11 தனித் தொகுதிகளும், பழங்குடியினத்தவா்களுக்காக ஒதுக்கப்பட்ட 2 தனித் தொகுதிகளும் அடங்கும். மொத்தம் 613 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். சுமாா் 2.06 கோடி போ் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா்.

வாக்கு எண்ணிக்கை மாா்ச் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com