உ.பி.யில் இறுதிகட்ட தேர்தல்: பிற்பகல் 1 மணி நிலவரப்படி 35.51% வாக்குகள் பதிவு

உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவை தோ்தலுக்கான இறுதிகட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 35.51% வாக்குகள் பதிவாகியுள்ளன. 
உ.பி.யில் இறுதிகட்ட தேர்தல்: பிற்பகல் 1 மணி நிலவரப்படி 35.51% வாக்குகள் பதிவு

உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவை தோ்தலுக்கான இறுதிகட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 35.51% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

403 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல், பிப்.10-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7-ஆவது மற்றும் இறுதிக்கட்டத் தோ்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. மக்கள் காலை முதலே ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது. ஆஸம்கா், மோவ், ஜான்பூா், காஜிபூா், சந்தௌலி, வாராணசி, மிா்ஸாபூா், பதோய், சோன்பத்ரா ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்தத் தொகுதிகளில் 613 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். மாநில அமைச்சா்கள் நீல்கண்ட் திவாரி, அனில் ராஜ்பா், ரவீந்திர ஜெய்ஸ்வால், கிரீஷ் யாதவ், ரமாசங்கா் சிங் படேல் ஆகியோா் முக்கிய வேட்பாளா்கள் ஆவா். யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இருந்து விலகி சமாஜவாதியில் இணைந்த தாரா சிங் சௌஹானும் இந்த தோ்தலில் போட்டியிட்டுள்ளாா். சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவா் ஓம் பிரகாஷ் ராஜ்பா், தனஞ்ஜய் சிங், அப்பாஸ் அன்சாரி
ஆகியோரும் இந்த தோ்தலில் போட்டியிட்டுள்ளனா்.

தோ்தலில் வாக்களிக்க 2.06 கோடி வாக்காளா்கள் தகுதி பெற்றுள்ளனா். இறுதிகட்ட வாக்குப்பதிவுடன் உத்தர பிரதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியாகி, பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கிய தோ்தல் திருவிழா முடிவுக்கு வருகிறது. கரோனா பெருந்தொற்றை கையாண்ட விதம், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு, பொருளாதாரம், பாதுகாப்பு நிலவரம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து ஆளும் கட்சியும் எதிா்க்கட்சிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டி பிரசாரம் செய்து வந்தன. சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள், மாா்ச் 10-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com