இந்தியா - சீன எல்லை விவகாரம்: மார்ச் 11-ல் 15வது கட்டப் பேச்சு

இந்தியா - சீன எல்லை விவகாரம் தொடர்பாக மார்ச் 11ஆம் தேதி ராணுவ உயர்மட்ட அதிகாரிகளுடனான 15வது கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

இந்தியா - சீன எல்லை விவகாரம் தொடர்பாக மார்ச் 11ஆம் தேதி ராணுவ உயர்மட்ட அதிகாரிகளுடனான 15வது கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை நடைபெற்ற 14 கட்டப் பேச்சுவர்த்தையில் கல்வான் பள்ளத்தாக்கிலுள்ள பான்காங் திசு ஏரியின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதி, கோக்ரா பகுதிகளின் மீது தீர்மானத்திற்கு வழிவகுத்துள்ளன.  

லடாக்கிலுள்ள இந்திய ராணுவப் பகுதியான சுஷுல் பகுதியில் இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்தியா - சீனா இடையே எல்லை விவகாரத்தில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்பு ராணுவத்தினரும் தாக்குதலில் ஈடுபட்டதிலிருந்து மோதல் அதிகரித்து வருகிறது. 

அதனைத் தொடர்ந்து பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 14 கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இதில் ஒருசில பகுதிகளில் மட்டுமே ராணுவம் திரும்பப் பெறப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. எனினும் முழுமையாக தீர்வு கிடைக்காததால், தற்போது வரும் 11ஆம் தேதி 15வது கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com