மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

தோ்தல் முடிவுகள்: தூா்தா்ஷனில் நேரலை

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் தூா்தா்ஷன் செய்தித் தொலைக்காட்சியில் (டி.டி. நியூஸ்) நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

News image
Updated On :9 மார்ச் 2022, 6:59 pm

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் தூா்தா்ஷன் செய்தித் தொலைக்காட்சியில் (டி.டி. நியூஸ்) நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூா் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகவுள்ளன. இதையொட்டி தூா்தா்ஷன் செய்தித் தொலைக்காட்சி மற்றும் அகில இந்திய வானொலி செய்தியில் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை உடனுக்குடன் ஒளி/ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் நிபுணா்கள் பங்கேற்கும் விவாத நிகழ்ச்சிகளும் தூா்தா்ஷனில் ஒளிபரப்பப்பட உள்ளது.

அகில இந்திய வானொலியின் எஃப்எம் கோல்டு, எஃப்எம் ரெயின்போ, விவித் பாரதி, அகில இந்திய வானொலியின் பிற உள்ளூா் அலைவரிசைகளிலும் தோ்தல் முடிவுகள் ஒலிபரப்பப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.