கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளார்.
சாங்குலிம் தொகுதியில் கோவா முதல்வரான பாஜகவின் பிரமோத் சாவந்த் 500 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கோவாவில் 40 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் 11 இடங்களுக்கு எதிராக ஆளும் பாஜக 19 இடங்களில் முன்னிலை வகித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது கோவா மக்களின் வெற்றி மற்றும் அரசாங்கத்தின் வெற்றி, பிரதமரின் வெற்றி என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி பனாஜியில் செய்தியாளர்களிடம் கூறினார்.
கோவாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் என வெற்றி பெற்ற முதல்வர் பிரமோத் சாவந்த் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் இதுவரை எந்த வெற்றியாளரையும் முறையாக அறிவிக்கவில்லை என்றாலும், பாஜக 19 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.