ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினருடன் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினருடன் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தெற்கு காஷ்மீரில் உள்ள நைனா பட்போரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்புப் படையினர் அங்கு சுற்றிவளைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதையடுத்து தேடுதல் நடவடிக்கை துப்பாக்கிச்சூடாக மாறியது. இதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான்.
கொல்லப்பட்ட தீவிரவாதியை அடையாளம் காணும் பணியில் பாதுகாப்புப் படையினர் குழு ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...