பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட நவ்ஜோத் சிங் சித்து தோல்வியுற்றார்.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(வியாழக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கிறது. முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து 6,750 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஜீவன் ஜோத் கௌர் வெற்றி பெற்றுள்ளார்.
சிரோமணி அகாலி தளம் கட்சியின் பிக்ரம் சிங் மஜிதியா 14,408 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார்.
முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியும் தான் போட்டியிட்ட சம்கௌர் சாஹிப் மற்றும் பதெளர்( Chamkaur Sahib and Bhadaur) ஆகிய 2 பேரவைத் தொகுதிகளிலும் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக செந்தில்பாலாஜி போட்டியிடாதது ஏன்? - தவெக கேள்வி

நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்!

முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல்
தினப்பலன்கள் - மேஷம்
வீடியோக்கள்
Jawahirullah interview | அதிமுக, பாஜகவுக்கு உதவ இறக்கிவிடப்பட்டவர் Vijay | Dinamani | Election 2026
தினமணி வீடியோ செய்தி...

#ipl2026 | சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன், ராஜஸ்தானில் ஜடேஜா: இதுதாண்டா ஆட்டம்! | MS Dhoni | RR vs CSK |
தினமணி வீடியோ செய்தி...

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...

