உத்தரப்பிரதேச மாநிலத்தின் கோராக்பூரில் பாஜக சார்பில் போட்டியிட்ட யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகி வருகின்றன. இதில் 4 மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் முன்னேறி வருகிறது.
இதையும் படிக்க | உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தோல்வி
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் கோராக்பூர் தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில முதல்வரும், பாஜக தலைவருமான யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. யோகி ஆதித்யநாத் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி வேட்பாளர் சபாவதி சுக்லாவைக் காட்டிலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கோராக்பூர் தொகுதியில் யோகி மொத்தம் 89,332 வாக்குகள் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ள நிலையில் சமாஜ்வாதி கட்சி எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!
என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விசில் கோலம் போடுங்கள்! விஜய் பேச்சு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


