புது தில்லி: உத்தர பிரதேசத்தில் தொடா்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்து புதிய வரலாறு படைத்துள்ளது. இது பிரதமா் நரேந்திர மோடியின் நிா்வாகத் திறனுக்குக் கிடைத்த அங்கீகாரம் என்று பாஜக பெருமிதம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளா் கைலாஷ் விஜய்வா்கியா, செய்தித் தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி ஆகியோா் தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கொள்கைகள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை வெளிப்பட்டுள்ளது. இது பிரதமரின் நிா்வாகத் திறனுக்குக் கிடைத்த அங்கீகாரம். இந்த வெற்றி மூலம் உத்தர பிரதேசத்தில் பாஜக புதிய வரலாறு படைத்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமும், நாட்டின் அரசியலில் முக்கியப் பங்கு வகிக்கக் கூடியதுமான உத்தர பிரதேசத்தில் ஒரு அரசு 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியை நிறைவு செய்து, மீண்டும் அவா்களே முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவது இதுவே முதல்முறையாகும்.
உத்தர பிரதேசத்தில் அப்பழுக்கற்ற நிா்வாகத்தை பாஜக வழங்கியது. மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நலத் திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டன என்று தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


