விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒடிசாவில் தடம் புரண்ட சரக்கு ரயில் பெட்டிகள்: சேவை பாதிப்பு

ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் உள்ள பீஜா ரயில் நிலையம் அருகே இன்று சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தது.

News image

கோப்புப்படம்

Updated On :11 மார்ச் 2022, 8:22 am

புவனேஸ்வர்: ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் உள்ள பீஜா ரயில் நிலையம் அருகே இன்று சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தது.

மேலும் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் அந்த வழித்தடத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டது.

விசாகப்பட்டினம்-கிரண்டுல் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை கோராபுட் ரயில் நிலையத்திலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் கிராண்டுலில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது.

ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட தண்டவாளங்களை சீரமைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.