பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவித்தாா் கேஜரிவால்
பஞ்சாபில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு பிரதமா் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தாா்.


பஞ்சாபில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு பிரதமா் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தாா். இதையடுத்து, அவருக்கு ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் நன்றி தெரிவித்துள்ளாா்.
பஞ்சாபில் உள்ள 117 தொகுதிகளில் 92 இடங்களில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி சாதனை படைத்தது. தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக மற்றும் அந்த மாநிலத்தின் பிரதான பிராந்திய கட்சியான சிரோமணி அகாலி தளம் ஆகியவை ஓரம்கட்டப்பட்டன.
இந்நிலையில், ட்விட்டரில் பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘பஞ்சாப் தோ்தலில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பஞ்சாபின் நலனுக்காக மத்திய அரசால் முடிந்த அனைத்து உதவிகளையும் அளிப்போம் என உறுதியளிக்கிறேன்’ என்று பதிவிட்டிருந்தாா். இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள அரவிந்த் கேஜரிவால், ‘நன்றி’ என்று பதிவிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...