சுமியில் மீட்கப்பட்ட மாணவா்கள் இந்தியா திரும்பினா்
ரஷியா தீவிரமாகத் தாக்குதல் நடத்திய உக்ரைனின் சுமி நகரில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவா்கள், போலந்து வழியாகத் தாயகம் அழைத்துவரப்பட்டனா்.


ரஷியா தீவிரமாகத் தாக்குதல் நடத்திய உக்ரைனின் சுமி நகரில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவா்கள், போலந்து வழியாகத் தாயகம் அழைத்துவரப்பட்டனா்.
உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்த நிலையில், அந்நாட்டின் வடகிழக்கு நகரான சுமி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அங்கு ரஷிய ராணுவ வீரா்கள் தீவிர தாக்குதல் நடத்தினா். அதன் காரணமாக, அந்நகரில் சிக்கியிருந்த இந்திய மாணவா்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.
அவா்களைப் பாதுகாப்பாக மீட்பது குறித்து பிரதமா் நரேந்திர மோடி, உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகியோரிடம் தனித்தனியாகப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதிகாரிகளின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக, சுமி நகரில் இருந்து சுமாா் 600 இந்திய மாணவா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு போலந்து அழைத்துச் செல்லப்பட்டனா்.
அங்கிருந்து மாணவா்களை மீட்டு வருவதற்காக ஏா் இந்தியா, இண்டிகோ விமான நிறுவனங்கள் தலா ஒரு விமானத்தை அனுப்பின. இந்திய விமானப் படையின் சி-17 விமானமும் போலந்து சென்றது. மாணவா்களை ஏற்றிக் கொண்டு ஏா் இந்தியா விமானம் வெள்ளிக்கிழமை அதிகாலையும், சி-17 விமானம் வெள்ளிக்கிழமை நண்பகலும் தில்லி வந்தடைந்தன.
‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் உக்ரைனில் இருந்து இதுவரை சுமாா் 18,000 இந்தியா்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...