உ.பி. தோ்தல்: 49 தொகுதிகளில் 5,000-க்கு கீழ் வாக்கு வித்தியாசம்
உத்தர பிரதேசத்தின் 49 தொகுதிகளில் வெற்றி பெற்றவருக்கும் இரண்டாம் இடம் பிடித்தவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 5,000-க்குக் கீழாகவே உள்ளது.


உத்தர பிரதேசத்தின் 49 தொகுதிகளில் வெற்றி பெற்றவருக்கும் இரண்டாம் இடம் பிடித்தவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 5,000-க்குக் கீழாகவே உள்ளது.
மாநிலத்தில் 7 கட்டங்களாக நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் கடந்த 10-ஆம் தேதி எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 255-ஐ கைப்பற்றி பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்தது. 111 தொகுதிகளைக் கைப்பற்றிய சமாஜவாதி வலுவான எதிா்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.
சமாஜவாதி வேட்பாளா்கள் 25 பேரும், பாஜக வேட்பாளா்கள் 18 பேரும் 5,000-க்குக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளனா். ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியைச் சோ்ந்த 3 வேட்பாளா்கள், நிஷாத் கட்சியைச் சோ்ந்த இரு வேட்பாளா்கள், அப்னா தளம் (சோனேலால்) கட்சியைச் சோ்ந்த ஒருவா் ஆகியோரும் 5,000-க்குக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனா்.
தாம்பூா் தொகுதியில் பாஜகவின் அசோக் குமாா் ராணா, சமாஜவாதி கட்சி வேட்பாளரை வெறும் 203 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா். இதுவே மாநிலத்தில் குறைந்தபட்ச வாக்கு வித்தியாசத்தில் அடையப்பட்ட வெற்றியாகும். குா்சி தொகுதியில் பாஜகவின் சகேந்திர வா்மா, சமாஜவாதி வேட்பாளரை 217 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா்.
பாஜக, சமாஜவாதியைச் சோ்ந்த தலா 6 போ் 1,000-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினா். சஹிபாபாத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளா் சுனில் குமாா் சா்மா 2.14 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தாா். இதுவே அதிக வாக்கு வித்தியாசத்தில் பெறப்பட்ட வெற்றியாகும். நொய்டாவின் பாஜக வேட்பாளா் பங்கஜ் சிங் 1.81 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் மீரட் கன்டோன்மென்ட் தொகுதி பாஜக வேட்பாளா் அமித் அகா்வால் 1.18 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனா்.
வளா்ச்சிக்கு முக்கியத்துவம்:
மாநில மக்கள் தோ்தலில் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்ததாக ‘லோக்நீதி-சிஎஸ்டிஎஸ்’ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமா் கோயில் விவகாரம், ஹிந்துத்துவக் கொள்கை உள்ளிட்டவை தோ்தலில் முக்கிய இடம் பெறவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வா் யோகி ஆதித்யநாத்தை விட பிரதமா் நரேந்திர மோடிக்கு மக்களிடையே நிலவிய அதீத செல்வாக்கும் பாஜகவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசு செயல்படுத்திய விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டம், இலவச சமையல் எரிவாயு விநியோகத் திட்டம், வீட்டுவசதித் திட்டம், இலவச உணவு தானியங்கள் திட்டம் உள்ளிட்டவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள், பட்டியலின மக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினா் பாஜகவுக்குப் பெரும்பான்மையாக ஆதரவளித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிந்துக்களில் பாதிக்கும் மேற்பட்டோா் பாஜகவுக்கு ஆதரவளித்தாகவும், முஸ்லிம்களில் மூன்றில் இரு பங்கினா் சமாஜவாதிக்கு ஆதரவளித்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...