நாட்டில் புதிதாக 3,116 பேருக்கு கரோனா
இந்தியாவில் புதிதாக 3,116 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
இந்தியாவில் புதிதாக 3,116 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,116 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | இளையான்குடியில் லாரி மோதி கல்லூரி மாணவர் பலி
மேலும் 5,559 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 47 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 4,24,37,072 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,15,850 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 38,069 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி:
கடந்த 24 மணி நேரத்தில் 20,31,275 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 1,80,13,23,547 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...